CA TAGS2024 விருதுவிழாவில்தொடர்ச்சியாக 4ஆவதுஆண்டாகசிறந்த 3 நிறுவனங்களில்ஒன்றாகsoftlogic life தெரிவு

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான softlogic life, சமீபத்தில் நடைபெற்ற 59ஆவது CA TAGS விருது வழங்கும் விழாவில் மீண்டும் தனது சிறப்பை வெளிப்படுத்தி இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இலங்கையின் சிறந்த 3 நிறுவனங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்ட softlogic life, நிறுவன அறிக்கையிடலில் ஒட்டுமொத்த சிறப்புக்கான வெண்கல விருதையும் வென்றது. இந்த நிகழ்வில், softlogic life நாட்டின் பல பெரிய குழும நிறுவனங்களை விஞ்சி 6 கௌரவ விருதுகளை வென்றது.

softlogic life இன் நிறுவன வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நிர்வாகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான அளப்பரிய அர்ப்பணிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் இந்த சிறப்பு வெற்றி, நாட்டின் நிதி அறிக்கையிடல் திறனை மேம்படுத்துவதற்கான softlogic life இன் தொடர்ச்சியான முயற்சிக்கான அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.

softlogic life நிறுவன அறிக்கையிடலில் புதிய பரிமாணங்களை ஆராய்ந்து வரும் வேளையில் இந்த வெற்றிகளைப் பெற்றிருப்பது சிறப்பு அம்சமாகும். கடந்த காலத்தில் நிதி புரிதலுக்காக வருடாந்த அறிக்கைகளின் பகுப்பாய்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றல் அடிப்படையிலான சிறப்பம்சங்களைப் பயன்படுத்திய இலங்கையின் முதல் நிறுவனமாக softlogic life மாறியுள்ளது. பங்குதாரர்களுக்கு நிதி மற்றும் நிதி சாரா தகவல்களை மதிப்பாய்வு செய்யும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது, நிதியியல் புரிதலின் தடைகளைக் குறைத்துள்ளது. புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துபவராக தனது சிறப்பை விருதுகள் மூலம் வெளிப்படுத்திய நிறுவனம், தனது தொடர்ச்சியான வணிக வளர்ச்சி மற்றும் சிறப்பான நிதித் திறனையும் இதன் மூலம் வெளிப்படுத்தி, காப்புறுதித் துறையில் மாபெரும் நிறுவனமாக மாறியுள்ளது.

இந்த விருது வழங்கும் விழாவில், வருடாந்த நிதி அறிக்கையிடலில் ஒட்டுமொத்தமாக சிறந்து விளங்கியதற்காக வெண்கல விருதை வென்ற softlogic life, டிஜிட்டல் மாற்ற அறிக்கையிடலுக்கான தங்க விருது மற்றும் காப்புறுதி துறையின் தங்க விருதையும் வென்றது. நிதி அறிக்கையிடலில் முன்னோடியாக தனது திறமைகளை மீண்டும் மீண்டும் நிரூபித்த softlogic life, தொடர்ந்து நான்காவது முறையாக தனது சிறப்பை இந்த விருது வழங்கும் விழாவின் மூலம் உயர்த்தியது.

CA TAGS விருது வழங்கும் விழாவில் இந்த விருதை வெல்வதற்காக முன்னணி வணிக நிறுவனங்களுடன் போட்டியிட softlogic life நிறுவனத்துக்கு நேர்ந்தது. இறுதியில், தொடர்ந்து நான்காவது முறையாகவும் சிறந்த 3 நிறுவனங்களுக்குள் இடம்பெற்ற ஒரே நிறுவனமாக வரலாற்றில் இடம்பிடித்தது. இதில் softlogic life இன் 2023 ‘Bigger. Better. Bolder’ என்ற கருப்பொருளில் அமைந்த வருடாந்த அறிக்கை, அதன் புதுமையான அணுகுமுறை மற்றும் வெளிப்படைத்தன்மை காரணமாக பெரிதும் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த பிரதான விருதுகளுக்கு மேலதிகமாக, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் வெண்கல விருது, நிறுவன ஆளுமை வெளிப்படுத்தல் நிதிச் சேவைகள் வெண்கல விருது, ஒருங்கிணைந்த அறிக்கையிடல் வெண்கல விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்ற softlogic life, நிலையான அறிக்கையிடலுக்கான சிறப்பு விருதுப் பிரிவில் அங்கீகாரச் சான்றிதழையும் 2024 CA TAGS விருது வழங்கும் விழாவில் பெற்றுக் கொண்டது.

இந்த வெற்றி குறித்து softlogic life இன் முகாமைத்துவப் இஃப்திகார் அஹமட் கருத்து தெரிவிக்கையில், ‘Bigger. Better. Bolder’ என்ற கருப்பொருளில் அமைந்த எமது 2023 வருடாந்த அறிக்கைக்காக வருடாந்த நிதி அறிக்கையிடலின் ஒட்டுமொத்த சிறப்புக்காக CA TAGS விருது வழங்கும் விழாவில் மூன்று உயர் விருதுகளை வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை நிறுவனங்களின் நிதி அறிக்கையிடலின் புதுமைப்படுத்தலுக்காகவும், பங்குதாரர்களுக்கு உயர் மதிப்பை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பும் இந்த வெற்றிகளில் நன்கு பிரதிபலிக்கிறது. காப்புறுதிக்கான தங்க விருது மற்றும் டிஜிட்டல் மாற்ற அறிக்கையிடலுக்கான தங்க விருது ஆகியவை AI தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் நாம் காட்டும் முன்னுரிமையை அங்கீகரிக்கிறது. இன்று எமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ள AI தொழில்நுட்பத்தை, அறிக்கையிடலுக்குப் பயன்படுத்த முடியுமானால், நிறுவனங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த softlogic life இன் பிரதான நிதி அதிகாரி நுவன் விதானகே, ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புதுமையான அறிக்கையிடல் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது பங்குதாரர்களுக்கு தெளிவாக, வெளிப்படைத்தன்மையுடன் மற்றும் அர்த்தமுள்ள வகையில் நிதி புரிதலை வழங்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். AI அடிப்படையிலான கருவிகளை ஒருங்கிணைத்தல், சிறந்த உலகளாவிய நடைமுறைகள் மற்றும் அறிக்கையிடல் சிறப்பின் புதிய தரநிலைகளைப் பின்பற்றி, நுண்ணறிவு மூலம் எமது பங்குதாரர்களை வலுவூட்ட நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். நாட்டின் நிறுவன அறிக்கையிடலில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக softlogic life அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மூலோபாய அணுகுமுறை மூலம் அதன் நம்பகத்தன்மையை உயர்த்த முடிந்துள்ளது. வெறும் நிதி அறிக்கையிடலுக்கு அப்பால் சென்று, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுமை, நிலைத்தன்மை மற்றும் பங்குதாரர்களின் உறுதியான அர்ப்பணிப்பின் சான்றாக விளங்கும் softlogic life, தனது அறிக்கையிடல் மூலம் பாரம்பரிய அறிக்கையிடல் நடைமுறைகளை AI மற்றும் இயந்திரக் கற்றல் அடிப்படையிலான அம்சங்களுக்கு புதுமைப்படுத்தியுள்ளது’ என்றார்.

2024 softlogic life விருது வழங்கும் விழாவிலும், அண்மையில் நிறைவடைந்த 2024 CMA ஒருங்கிணைந்த சிறப்பு அறிக்கையிடல் விருது வழங்கும் விழாவிலும் 5 விருதுகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அங்கு ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்கான ஒட்டுமொத்த வெள்ளி விருது, காப்புறுதித் துறையின் தங்க விருது உள்ளிட்ட ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்கான 5 விருதுகள் மற்றும் உத்திசார் நோக்கங்களுக்கான சிறந்த வெளிப்படுத்தல் மற்றும் மூலதன வெளிப்படுத்தலுக்கான 2 சிறப்பு விருதுகளையும் softlogic life வென்றது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பங்குதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட softlogic life இன் அறிக்கையிடல் திட்டத்தின் சிறப்பே இந்த விருதுகளுக்கு காரணமாக அமைந்தது.