கண்ணோட்டம்

நாம் யார்?

சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸின் இணையற்ற வலிமை மற்றும் ஆதரவுடன், நாங்கள் இன்று இலங்கையின் முன்னணி ஆயுள் காப்பீட்டாளர்களில் ஒருவராக இருக்கிறோம். எங்கள் தலைமை நிறுவனமான சொஃப்ட்லொஜிக் இலங்கையின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் புகழ்பெற்ற குழு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் இலங்கையில் ஆயுள் காப்பீட்டுத் துறையில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்தவும், ஒரு இலச்சனையை உருவாக்குவதிலும், எங்கள் கூட்டு முயற்சி ஒரு ஒரு பொருத்தமான பரிபூரண செயல்திட்டம் என்று நாங்கள் நம்புகிறோம். சொஃப்ட்லொஜிக் குழு நிறுவனம், ஐ.சி.டி, உடல்நல பராமரிப்பு, சில்லறை விற்பனை, நிதி சேவைகள், ஆட்டோமொபைல்கள் மற்றும் லேஷர் போன்ற துறைகளில் உட்புகுவதன் மூலம் எங்கள் இலச்சனையை (பிரான்டை) மேம்படுத்துவதுடன்  எங்கள் பிராண்டின் வாக்குறுதியான , ‘ லிவ் லைஃப் டுடே ‘ என்பதை திறமையாக மக்கள் மத்தியில் கொண்டுபோய் தீவில் இருக்கும் இலங்கையர்களினது மிகவும் விரும்பத்தக்க காப்புறுதி நிறுவனம் என்ற பெயரையும் பெற்றிருக்கிறோம்.

நாம் என்ன செய்யகிறோம்?

நாங்கள் மக்களை பாதுகாக்கும் வியாபாரத்தில் இருக்கிறோம். வயதான மற்றும் இளைய இலங்கையர்களின் வாழ்க்கை தரத்தின் நிலையை மேம்ப்படுத்தும் அட்டகாசமான கண்டுபிடிப்புகளையும் படைப்பாற்றளையும் அயராது வழங்குவது மிகவும் இயற்கையாகவே எமக்கு வரும். எங்களது வித்தியாசமான தயாரிப்புகளின் போர்ட்ஃபோலியோ, உலகத்தரம் வாய்ந்த ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளின் ஏராளமானவற்றை உங்களுக்குக் கொண்டுவருகிறது, இது உங்களுக்கு சுதந்திரத்தையும், வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

தொலைநோக்கு (Vision)

உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்புகள் மூலம் இலங்கையில் காப்பீட்டில் புரட்சியை/ புதுத்திருப்பத்தை ஏற்படுத்தவும், பங்குதாரர்களுக்கு அசாதாரண/ எதிப்பார்ப்பை மிஞ்சும் மதிப்பை வழங்குவது.


பணி (MISSION)

உங்கள் நல்வாழ்வை வளர்ப்பதற்கு நாங்கள் இருக்கிறோம், எனவே நீங்கள் இன்று வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க முடியும்.


மதிப்புகள்

பராமரிப்பு

வாழ்க்கையின் ஒரு பங்காளியாக உங்கள் ஒவ்வொரு படிமுறையிலும் உங்களைப் பராமரித்தல்

நம்பகத்தன்மை

எங்கள் நம்பகத்தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்ய இடமளிக்காமை

தைரியம்

எந்த சவாலான நிலையையும் தைரியமாக சந்தித்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குவது

புத்தாக்கம்

புத்தாக்கத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளரின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்துவது

எளிமை

நாங்கள் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை ஒன்றிணைப்பதன் மூலம் வாடிக்கையாளரின் வாழ்க்கையை எளிதாக்குதல்