இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life Insurance PLC, தனது புத்தாக்க திறனையும், மக்களுடனான நெருக்கமான உறவையும் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், 2024 அக்டோபர் 29ஆம் திகதி நடைபெற்ற SLIM Digis 2.4 விருது வழங்கும் விழாவில் அதிஉயரிய விருதான ‘The Grand Prix’ உள்ளிட்ட மொத்தம் 09 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் ((Sri Lanka Institute of Marketing – SLIM) Digis விருதுகள், நமது நாட்டின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் காணப்படும் சிறந்த முயற்சிகள், புத்தாக்கங்கள் மற்றும் திறமைகளை அங்கீகரித்து கௌரவிக்கிறது. மேலும், உலகளாவிய டிஜிட்டல் துறையில் இப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் இவ்விருதுகள் அங்கீகரிக்கின்றன. இலங்கையின் டிஜிட்டல் துறை பல வணிக நிறுவனங்களுக்கு தொடர்ந்து மதிப்பு சேர்த்து வருவதால், டிஜிட்டல் உலகில் சிறந்து விளங்கும் படைப்புகளையும், திறமைகளையும் கொண்டாடுவதே SLIM Digis இன் நோக்கமாகும்.
காப்புறுதி துறையில் முதன்முறையாக Softlogic Life வென்ற இந்த உயரிய விருது, நிறுவனத்தின் ‘Legends’ என்ற முன்னோடி மற்றும் புதுமையான பிரச்சாரத்தின் படைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் சமூக தாக்கத்தை அங்கீகரிக்கிறது. மேலும், ‘Dengeez’, ‘Legends’ மற்றும் ‘Sri Lanka’s Inspiring Crowd sourced Christmas Tree of Hope’ ஆகிய பிரச்சாரங்களுக்காக Softlogic Life நிறுவனம் 04 தங்கப் பதக்கங்கள், 03 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் வென்றுள்ளது.
Softlogic Life இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘Legends’ தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது. deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் நான்கு புகழ்பெற்ற இசை ஜாம்பவான்களான எச்.ஆர். ஜோதிபால, மில்டன் மல்லவாராச்சி, கிளரன்ஸ் விஜேவர்தன மற்றும் சுனில் பெரேரா ஆகியோருக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுத்து Softlogic Life ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டது. குறித்த விளம்பரத்தில் ‘தந்தையர்களாக’ காட்டப்பட்ட இந்த கலைஞர்கள் மூலம், எதிர்பாராத சூழ்நிலைகளில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், மன நலனுக்காகவும் ஆயுள் காப்புறுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த Softlogic Life முயற்சித்தது. இன்றைய சவாலான காலகட்டத்தில் மக்கள் தனித்து விடப்படவில்லை என்ற ஆறுதல் செய்தியை Softlogic Life இந்த படைப்பாற்றலுடன் வெளிப்படுத்துகிறது.
இலங்கையர்கள் எதிர்கொள்ளும் நிதி சிரமங்களை எடுத்துக்காட்டும் பிரபலமான ‘Leda Leda’ பாடலைப் பாடிய, நம்மை விட்டுப் பிரிந்த நான்கு சிறந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த ‘Legends’ படைப்பு முயற்சி SLIM Digis விருது வழங்கும் விழாவில் Grand Prix விருதை வென்றது. மேலும், ‘Best Use of AI Technologies’ மற்றும் Cross Media Integration ஆகியவற்றிற்கான 2 தங்க விருதுகளுடன், காப்புறுதி துறையில் ‘Best Digital Marketing Campaign in Insurance’ இற்கான வெள்ளி விருதையும் Softlogic Life பெற்றுக்கொண்டது.
Softlogic Life முன்வைத்த ‘Dengeez’ விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்த விருது விழாவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்றது. எதிர்மறை உளவியலை படைப்பாற்றலுடன் பயன்படுத்தி டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த நிகழ்ச்சி இலங்கையர்களிடையே சிறப்பு கவனத்தையும், விரிவான விவாதங்களையும் பெற்றது.
மனரீதியான தூண்டுதலை ஏற்படுத்த, டெங்கு நோய் தடுப்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அதன் பரவலை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அதிகரிக்க மக்கள் ஊக்குவிக்கப்பட்டனர். டெங்குவுக்கு எதிராக செயல்பட எதிர்மறையான கருத்தை முன்வைத்து, மக்களிடையே டெங்குவை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியம் குறித்த அர்த்தமுள்ள உரையாடலை உருவாக்க இந்த படைப்பின் மூலம் Softlogic Life நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இவ்வாறான பல சிறப்புகள் காரணமாக, Softlogic Life நிறுவனத்திற்கு CSR, நோக்கம்-சார்ந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தலுக்கான தங்க விருது, சிறந்த டிஜிட்டல் படைப்பாற்றல் உள்ளடக்கத்திற்கான வெள்ளி விருது, மற்றும் காப்புறுதி துறையில் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்திற்கான வெண்கல விருது ஆகியவை கிடைத்தன.
மேலும், காய்கறி, செடிகளைக் கொண்டு இலங்கையின் முதல் மக்கள் பங்களிப்புடன் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியதற்காக Softlogic Life இன் ‘Sri Lanka’s Inspiring Christmas Tree of Hope’ நிகழ்ச்சி Cross Media Integration வெள்ளி விருதை தட்டிச் சென்றது. வீட்டுத் தோட்டங்களுக்கான விதைகளை மக்களுக்கு வழங்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த அற்புதமான முயற்சி, கொழும்பு, காலிமுகத்திடலில் ஒரு பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரமாக உருவெடுத்தது. மக்களின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக விளங்கிய இந்த புதுமையான முயற்சி, நாடு முழுவதும் நம்பிக்கையை ஊட்டியதோடு, கிறிஸ்துமஸ் காலத்தில் ஊடகங்களின் முக்கிய கவனத்தையும் பெற்றுக்கொண்டது.
இந்த வெற்றிகள் குறித்து கருத்து தெரிவித்த Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட், ‘எங்கள் வாடிக்கையாளர் சமூகத்துடன் வலுவான உறவுகளை உருவாக்குவதற்கும், உண்மையான சவால்களை எதிர்கொள்வதற்கான உத்திசார் புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கும் நாங்கள் செய்யும் அர்ப்பணிப்பு SLIM Digis விருது வழங்கும் விழாவில் சிறப்பாக பிரதிபலித்தது. உள்நாட்டு வர்த்தக விளம்பரத்தில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் முன்னோடிகளாக இருக்கும் நாங்கள், நோக்கம் சார்ந்த வணிகம் வரை நாட்டின் டிஜிட்டல் தகவல் தொடர்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். இந்த சிறப்பு எங்கள் தகவல் தொடர்பு மூலம் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் வெளிப்படுகிறது. பல தசாப்தங்களாக தொழில்துறையின் ஜாம்பவான்களாக இருந்த நிறுவனங்களுக்கு சவால் விடுத்து, 5 ஆண்டுகளில் இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக Softlogic Life மாறியுள்ளோம். இலங்கையின் இளம் காப்புறுதி வர்த்தக நாமமாகவும் எமது நிறுவனம் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளதுடன், சுகாதார காப்புறுதியில் இலங்கையின் முன்னணி நிறுவனமாகவும் எங்கள் இடத்தை உறுதி செய்துள்ளோம். எனவே, SLIM Digis விருது வழங்கும் விழாவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எல்லைகளைத் தாண்டி செல்வதற்கும், இலங்கையர்களுக்கு காப்புறுதியின் தேவையை எடுத்துரைப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த Softlogic Life இன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்த்ரி பிலிமதலவ்வே, “2024 SLIM Digis விருதுகளில் நாங்கள் பெற்ற இந்த சிறப்பு வெற்றி எங்களின் படைப்பாற்றல் கூட்டுமுயற்சி மற்றும் மூலோபாய புத்தாக்க கண்டுபிடிப்பு திறன்களுக்கான சிறந்த சான்றாகும். எனவே, இந்த சிறப்பு பிரச்சாரங்களுக்கு ஆதரவளித்த MullenLowe, Digibrush, Shift Integrated, New Media Solutions மற்றும் Third Shift Media ஆகிய நிறுவனங்களுக்கு இந்த தருணத்தில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் அனைவரும் இணைந்து இலங்கையர்களின் கவனத்தை ஈர்க்கும் மிகவும் தாக்கமுள்ள உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும், அதன் மூலம் இலங்கையின் காப்புறுதி மற்றும் டிஜிட்டல் திறன்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் பணியாற்றியுள்ளோம். இதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மேலும் அதிகரிப்பதற்கும், படைப்பாற்றலுடன் அர்த்தமுள்ள வகையில் தற்போதைய செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரும் மதிப்பை வழங்குவதற்கும் இது ஒரு காரணமாக அமைகிறது’ என்று தெரிவித்தார்.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் நடத்தப்படும் SLIM Digis விருதுகள் வழங்கும் விழா இலங்கையின் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களை கௌரவிக்கிறது. ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் துறையில் வெற்றி பெற விரும்பும் வர்த்தக நாமங்ளுக்கு இது மிகவும் விரும்பத்தக்க விருதாக உள்ளது. அத்துடன், 280க்கும் மேற்பட்ட முன்னணி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முகவர் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நாமங்களைக் கௌரவிக்கும் இந்த விருது விழா, சர்வதேச மற்றும் சமகால டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களுடன் தங்கள் சந்தைப்படுத்தல் உத்திகளை இணைக்க விரும்பும் வர்த்தக நாமங்களுக்கு இந்த விருது விழா ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
புகைப்பட விபரம்:
படம் 01 – Softlogic Life முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட்
படம் 02 – Softlogic Life சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் சமிந்த்ரி பிலிமதலவ்வே
படம் 03 – முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட்டுடன் Softlogic Life இன் விருது வென்ற குழு
Softlogic Life பற்றி
Softlogic Life Insurance PLC என்பது Softlogic Capital PLC இன் துணை நிறுவனமாகும். இது Softlogic Life குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் குழுமம் சுகாதாரம், வணிகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு, சுற்றுலா, வாகனம் மற்றும் நிதிச் சேவைகள் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இலங்கையின் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளரான Leapfrog Investments அடங்கும். இந்த நிறுவனம் 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை நிர்வகிக்கிறது. மேலும் உலகின் மிகவும் புகழ்பெற்ற முதலீட்டு அமைப்புகளைக் கொண்ட கவர்ச்சிகரமான முதலீட்டாளர் தளத்தைக் கொண்டுள்ளது.
தொடர்புக்கு: Upeksha.Hettiarachchi@softlogiclife.lk