திரு. சஞ்ஜய டபிள்யு. மொஹோத்தல
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
சஞ்ஜய டபிள்யு. மொஹோத்தல, சிங்கப்பூரிலுள்ள பொஸ்டன் கொன்சல்டிங் குரூப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பங்காளராக கடமையாற்றியுள்ளதுடன், வளங்கள் பிரயோகிப்பு, வாடிக்கையாளர் இலாகா நிர்வாகம், செயற்பாட்டு பிரிவுகள் மேம்பாடு மற்றும் மக்கள் விருத்தி போன்றவற்றுக்கு பொறுப்பாக திகழ்ந்தார். செயற்பாட்டு ரீதியில், பிரதான முதலீட்டாளர்கள் மற்றும் தனியார் பங்கிணைப்பு (PIPE) வாடிக்கையாளர்கள், இறையாண்மை செல்வ நிதியம் (SWF), சர்வதேச MNCகள், பிராந்திய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு இவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இவரின் நிபுணத்துவத்தில் M&A, முதலீடுகள், கூட்டாண்மை விருத்தி, மூலோபாயம், மீள-கட்டமைத்தல், சந்தை சென்றடைவு, டிஜிட்டல் ஈடுபாடு மற்றும் பாரியளவு மறுசீரமைப்பு போன்றனவும் அடங்கியுள்ளன.
தொழில்முயற்சியாண்மை மற்றும் மூலோபாயம் தொடர்பில் தனது முதுமாணிப் பட்டத்தையும், UCLA அன்டர்சன் ஸ்கூல் ஒஃவ் மனேஜ்மன்ட் இலிருந்தும், இலங்கை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலிருந்து இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியல் இளமாணிப் பட்டத்தையும், ஐக்கிய இராஜ்ஜியத்தின், சந்தைப்படுத்தல் பட்டய கல்வியகத்திலிருந்து சந்தைப்படுத்தலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் முகாமைத்துவ பட்டய கல்வியகத்தின் முகாமைத்துவ கணக்கியல் டிப்ளோமாவையும் இவர் கொண்டுள்ளார்.