Softlogic Life ஆனது, நிதியாண்டில் சிறந்த செயல் வீரனாகத் தன்னைப் பதிவு செய்துள்ளது. தனது மொத்த எழுதப்பட்ட மொத்த நேரடி மற்றும் கருதப்பட்ட கட்டுப்பணம் ஆனது (GWP) 2023 டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவடையும் காலப் பகுதியில் 26.3 பில்லியன் ரூபாவாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனமானது 14% உயர்மட்ட வளர்ச்சியினை கொண்டிருந்தது, இது இத்தொழில்துறையின் வளர்ச்சி விகிதமான 12% ஐ விடவும் அதிகமானது. சவால்கள் மிக்க பொருளாதார சூழ்நிலைமைகள் இருந்தபோதிலும், Softlogic Life ஆனது தனது காப்புறுதி பெறுநர்களுக்கு ஆதரவாக பக்கத்துணையாக இருந்து வந்துள்ளது. இவ்வுறுதிப்பாட்டின் வெளிப்பாடாக 2023-ம் ஆண்டில் நட்டஈட்டுக் கோரிக்கைகள் மற்றும் சலுகைகளாக ரூ. 13.5 பில்லியன் ரூபாவினை செலுத்தித் தீர்த்துள்ளது. இது 2022ல் 9.1 பில்லியன் ரூபாவாகும்.
பகுப்பாய்வு இடம் பெற்ற காலப் பகுதியில், Softlogic Life இன் சந்தை பங்கு ஆனது 17.2% ஆக அதிகரித்துக் காணப்பட்டது. சந்தையில் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாக அதன் நிலையினை உறுதிப்படுத்திக் கொண்டது. இந்நிறுவனமானது பல பழைய ஜாம்பவான்களையும் மிஞ்சி, வலுவான வளர்ச்சி வேகத்தை வெளிப்படுத்தியது என்றே கூறவேண்டும். Softlogic Life நிறுவனம் 10 ஆண்டுகளில் மொத்த எழுதப்பட்ட, மொத்த நேரடி மற்றும் கருதப்பட்ட கட்டுப்பணம் (GWP) ஓர் குறிப்பிட்ட காலப்பகுதியில் முதலீடுகளின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 26% இருந்தது. இது தொழில்துறையின் 10 ஆண்டு GWP CAGR வளர்ச்சியாக 14% ஆக இருந்தது. நாட்டில் காப்புறுதி ஊடுருவலை அதிகரிப்பதில் நிறுவனத்தின் பங்களிப்பானது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 700,000 க்கும் மேற்பட்ட செயல்ப்பாட்டில் உள்ள காப்புறுதிகள் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்க்கையினை உள்ளடக்கியது. சுகாதார காப்பீட்டு சந்தையில் 35% சந்தை பங்கைக் கொண்டுள்ளதன் மூலம் Softlogic Life ஆனது முன்னிலை வகிக்கின்றது.
இந்நிறுவனமானது 23% பங்குதாரர் மூலதனத்தின் மீதான வருமனமானத்தினை (ROE) ஈட்டியுள்ளது. இது கடந்த ஐந்து வருடங்களில் 20% விடவும் குறைவாக அமைந்தது. வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) ரூ.2.8 பில்லியன் ஆகவும், வரிக்கு முந்திய லாபம் ரூ. 3.2 பில்லியனும் ஆகும். மொத்த சொத்துக்கள் ரூ. 51.3 பில்லியன் ஆகும், மொத்தப் பங்குதாரர் மூலதனமானது ரூ. 13.3 பில்லியன் ஆகும், இது 22.6% வளர்ச்சியினைக் காட்டுகின்றது. மேலுமாக, நிறுவனத்தின் நிதிசார் முதலீடுகள் ரூ. 43.5 பில்லியன் ஆகும் மேலும் அதன் மொத்த சொத்துக்களில் 84.8% ஆகும்.
மேலும், 2023 ஆம் வருடத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் முதலீட்டு வருமானம் ரூ. 7.9 பில்லியன் ஆகும், இது 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 55% வளர்ச்சியினைக் காட்டுகின்றது. இவ் வளர்ச்சியினை, 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மொத்த நிகர வருமனமானது 25 % அதிகரிப்பினைக் கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் Softlogic Life இன் அசாத்தியமான செயல்திறனானது அதன் வலுவான நிதிநிலை மற்றும் சவால் மிக்க பொருளாதாரச் சூழ்நிலைமைகளிலும் அதன் மீண்டெழும் திறனை எடுத்துக்காட்டுகின்றது. நிறுவனம் 367% ஆல் போதிய அளவில் ஆரோக்கியம் மிக்க மூலதனத் தகுதி விகிதத்தினைப் (CAR) பேணி வந்துள்ளது, இது 120% எனும் சீராக்கல் தேவையினை விடவும் கணிசமான அளவு அதிகமானதாகும்.
சாதகமற்ற பொருளாதாரச் சூழலின் சவால்கள் இருந்தபோதிலும், Softlogic Life இன் 14% அதிகரித்த வருவாய், அதன் காப்புறுதி பெறுநர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு மதிப்பு சேர்ப்பு மற்றும் ஸ்திரத்தன்மை என்பவற்றினையும் தெளிவாக நிரூபிக்கிறது. ஆம், சாதகமற்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய சூழலிலும் இவ் அசாத்திய வளர்ச்சியானது குறிப்பிடத்தக்கதாகும். பொருளாதார சவால்களினை ஓர் நிறுவனம் எவ்வாறு கையாள முடியும் என்பதையும், அதன் காப்புறுதி பெறுநர்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் நிதி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் ஊர்ஜிதப்படுத்வதையும் இவ்வளர்ச்சி காட்டுகின்றது. இது ஒரு நம்பிக்கை மற்றும் உத்தரவாதம் மிக்க ஆயுள் காப்புறுதி பங்காளராக Softlogic Life இன் நற்பெயரினை மேலும் வலுப்படுத்துகின்றது.
”சவால்கள் நிறைந்த வர்த்தக சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருந்த நிலையிலும் தனது சந்தை பங்கினை அதிகரித்ததன் மூலம், இலங்கையில் இரண்டாவது மிகப் பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தனது நிலையினை பேணிவந்தது மட்டுமின்றி, வலுப்படுத்தியும் உள்ளது” என்று Softlogic Life Insurance PLC இன் தலைவரான Ashok Pathirage தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறுகையில் “இச்சாதனைகள் யாவும் நிறுவனத்தின் வெற்றிகாண் செயல்திட்ட முன்முயற்சிகளின் செயல்திறன் மற்றும் அந்த வெற்றிகாண் செயல்திட்ட முன்முயற்சிகளினை உறுதியாக செயல்படுத்துவதற்கான சான்றாகும். Softlogic Life ஆனது தொடர்ச்சியான வெற்றியினை தனதாக்கிக் கொள்ளத் தயாராகவுள்ளது, மேலும் சவால்களை சமாளிக்கவும், ஆயுள்க் காப்புறுதித் துறையின் மாறிவரும் தன்மையின் வாய்ப்புகளினைப் பயன்படுத்தவும் நிறுவனத்தின் திறன் மீது எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது எனக்கூறினார்”.
இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையினை மாற்றியமைப்பதில் Softlogic Life ஆனது முன்னணியில் திகழ்கின்றது. நவீன புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் இந்நிறுவனமானது, இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தினை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் செல்ல எப்போதும் தொடர்ந்து முயன்று வருகின்றது. AI மூலம் இயங்கும் ஒரு நாள் தானியங்கி துரித இழப்பீட்டுத் தீர்வு, 1 நிமிட மருத்துவமனை இழப்பீட்டுத் தீர்வு, 100% டிஜிட்டல் விற்பனை தளம், தானியங்கி காப்புறுதி வழங்கல் மற்றும் Mobile அடிப்படையிலான நுண் தயாரிப்புகள் உள்ளிட்ட தொழில்துறையில் முதல் முயற்சிகள் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டினை எடுத்துக்காட்டுகின்றன.
இவ்வகைப் புத்தாக்கங்கள் புதிய தொழிற்துறை தரங்களினை நிறுவியுள்ளன, மேலும் Softlogic Life இன் போட்டி நிலையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. Softlogic Life நிறுவனத்தின் சாதனைகள் வெறும் செயல்பாட்டு திறமையையும் தாண்டி முன்நகர்கின்றன. நிறுவனமானது மதிப்புமிக்க 58 வது CA இலங்கை TAGS வருடாந்திர அறிக்கை விருதுகளில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வகையில் வெற்றியினைப் பெற்றுள்ளது, இது தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும், இரண்டாவது இடத்தினைப் பிடித்துள்ளது. மேலுமாக, CMA ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விருதுகளில், Softlogic Life ஆனது ஒட்டுமொத்த வெற்றியாளர் எனும் பேரினைப் பெற்றுள்ளது, இது தொழில்துறையில் அதன் தலைமையை மேலும் வலியுறுத்துகின்றது.
Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளராகிய Iftikar Ahamed, நிறுவனத்தின் செயல்திறன் தொடர்பாக இவ்வாறு கூறினார், “ஒரு சவால்மிக்க ஆண்டில், Softlogic Life பேரிடியைத் தாங்கியது மட்டுமல்லாமல், எமது முன்னோக்கு வர்த்தக உத்திகள் மற்றும் வாடிக்கையாளர்களினை இலக்காகக் கொண்ட வெற்றிக்கான திட்டங்களுக்கு நன்றி. இவ்வளர்ச்சியானது வெறுமென எண்ணிக்கை அடிப்படையிலான சாதனை மட்டுமல்லாது, நமது காப்புறுதி பெறுநர்களின் நிதி நலனுக்கான, நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்புமாகும். சந்தையின் சிக்கலான சூழ்நிலையில், எமது காப்புறுதி பெறுநர்களுக்கு சேவை செய்வதற்கும், மதிப்பை உருவாக்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கும், எமது உறுதிப்பாட்டின் மூலம் அவர்களுக்கு இதமான வாழ்விற்கு உத்தரவாதம் அளிப்பதும் எமது நோக்கமாகும். இச்சவால்களினை அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத்திற்கான வாய்ப்புகளாக நாம் பார்க்கிறோம். 2024 ஆம் வருடத்தில் நாம் ஏற்கனவே ஒரு சிறந்த தொடக்கத்தினை அடைந்துள்ளோம், மேலும் எமது நெகிழ்திறன் மற்றும் முற்போக்கான அணுகுமுறை என்பன தொடர்ந்து Softlogic Life ஐ வெற்றியின் பாதையில் இட்டுச்செல்லும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும்.”
Softlogic Life தொடர்பாக
Softlogic Life இன் முகாமைத்துவப் பணிப்பாளராகிய Iftikar Ahamed, நிறுவனத்தின் செயல்திறன் தொடர்பாக இவ்வாறு கூறினார், “ஒரு சவால்மிக்க ஆண்டில், Softlogic Life பேரிடியைத் தாங்கியது மட்டுமல்லாமல், எமது முன்னோக்கு வர்த்தக உத்திகள் மற்றும் வாடிக்கையாளர்களினை இலக்காகக் கொண்ட வெற்றிக்கான திட்டங்களுக்கு நன்றி. இவ்வளர்ச்சியானது வெறுமென எண்ணிக்கை அடிப்படையிலான சாதனை மட்டுமல்லாது, நமது காப்புறுதி பெறுநர்களின் நிதி நலனுக்கான, நமது உறுதிப்பாட்டின் பிரதிபலிப்புமாகும். சந்தையின் சிக்கலான சூழ்நிலையில், எமது காப்புறுதி பெறுநர்களுக்கு சேவை செய்வதற்கும், மதிப்பை உருவாக்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கும், எமது உறுதிப்பாட்டின் மூலம் அவர்களுக்கு இதமான வாழ்விற்கு உத்தரவாதம் அளிப்பதும் எமது நோக்கமாகும். இச்சவால்களினை அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத்திற்கான வாய்ப்புகளாக நாம் பார்க்கிறோம். 2024 ஆம் வருடத்தில் நாம் ஏற்கனவே ஒரு சிறந்த தொடக்கத்தினை அடைந்துள்ளோம், மேலும் எமது நெகிழ்திறன் மற்றும் முற்போக்கான அணுகுமுறை என்பன தொடர்ந்து Softlogic Life ஐ வெற்றியின் பாதையில் இட்டுச்செல்லும் என்பது எனது பலமான நம்பிக்கையாகும்.”