இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life இன் வர்த்தக அபிவிருத்தியின் பொது முகாமையாளர் திரு. லஹிரு மதுரங்க, நிதியியல் நிபுணர்களின் முன்னணி உலகளாவிய சங்கமான MDRT இன் இந்நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட இளம் தொழில் வல்லுநர் என்றும் அவரைக் குறிப்பிடலாம்.
MDRT இன் இலங்கைத் தலைவர் என்பது உலகளாவிய MDRT அமைப்பில் தலைமைப் பதவியாகும், இது சிறந்த ஆயுள் காப்புறுதி மற்றும் நிதிச் சேவை நிபுணர்களின் சர்வதேச சங்கமாகும். MDRT இல் அங்கம் வகிக்கும் இலங்கையின் காப்புறுதி மற்றும் நிதிச் சேவை நிபுணர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இலங்கையின் தலைவர், அது தொடர்பான முக்கிய கடமைகளுக்குப் பொறுப்பாவார். பதவியின் கடமைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் – அமைப்பின் தூரநோக்குப் பார்வை, மதிப்புகள் மற்றும் தரநிலைகளை முன்னேற்றுவதன் மூலம் இலங்கையில் MDRT உறுப்பினர்களின் பிரதிநிதியாகச் செயல்படுதல். அங்கு அவர் உலகளாவிய MDRT அமைப்புக்கும் உள்ளூர் உறுப்பினர்களுக்கும் இடையிலான உறவைப் பேணுவதற்குப் பணியாற்றுவார்.
ஆதரவு மற்றும் உறுப்பினர் வளர்ச்சி – காப்புறுதி மற்றும் நிதித் துறைகளில் உயர் செயல்திறன் கொண்ட நிபுணர்களை நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் இலங்கையில் MDRT அங்கத்துவத்தை வளர்த்தல். MDRT க்கு தகுதி பெற விரும்பும் உறுப்பினர்களுக்கு தலைவர் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குகிறார்.
தொழில்சார் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பு – இலங்கையில் MDRT உறுப்பினர்களின் அறிவு, திறன்கள் மற்றும் நெறிமுறை தரங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி, கருத்தரங்குகள் மற்றும் பட்டறைகளை எளிதாக்குதல். MDRT இன் வளங்களை மேம்படுத்துதல், கருத்தரங்குகள் மற்றும் நிதி மற்றும் காப்பீட்டு நிபுணர்களுக்கான சிறந்த நடைமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
இலங்கையில் காப்புறுதி மற்றும் நிதிச் சேவை நிபுணர்களின் தொழில்சார் மேம்பாடு மற்றும் உலகளாவிய அங்கீகாரத்திற்கு இந்த நிலை மிகவும் முக்கியமானது.
2006 இல் Softlogic Life இல் ஒரு குழுத் தலைவராக இணைந்தார், லஹிரு சிறந்த செயல்திறனுடன் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார் மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு தனித்துவமான நபராக ஆனார். லஹிருவின் திறமை மற்றும் அர்ப்பணிப்பினால் கிடைத்த இந்த வாய்ப்பு அவருக்கும் Softlogic நிறுவனத்திற்கும் நிச்சயம் பெருமை சேர்க்கும்.
லஹிரு Softlogic Lifeஇன் தனித்துவமான படைப்பு. பன்முகத்தன்மையை மையமாகக் கொண்டு, Softlogic Life மிக உயர்ந்த தரத்தில் விற்பனைப் படையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. அதனால்தான் MDRT இன் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களை வழங்கக்கூடிய நிறுவனம் MDRT தகுதிகளைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிகிறது. அதன்படி, Softlogic Life இந்த ஆண்டு 263 MDRT தகுதிகளைப் பதிவு செய்துள்ளது, இது அவர்கள் பதிவு செய்த அதிக எண்ணிக்கையிலான MDRT தகுதிகளைக் குறிக்கிறது.
லஹிருவின் இதுவரையான சாதனைகள் அவரது பயணத்தில் காட்டப்பட்ட அர்ப்பணிப்பையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றன. அவர் ‘ஆண்டின் சிறந்த தொழில் முனைவோர்’ உட்பட பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் மற்றும் தேசிய ஆயுள் காப்புறுதி ஆலோசகர்கள் மாநாட்டில் பல விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்த விற்பனை சிறப்பு (2007 முதல் 2016 வரை), சிறந்த கிளை முகாமையாளர் (2019 & 2020) மற்றும் சிறந்த மண்டல முகாமையாளர் (2021 & 2022) லஹிரு MDRT தகுதி 14 முறை, Court of the Table (COT) என பல்வேறு பாத்திரங்களில் 14 முறையும் வழங்கப்பட்டது. 5 முறை தகுதி பெற்று, ‘MDRT Life Member’ என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.
MDRT சாதனைகளுக்கு மேலதிகமாக, 5வது Asia Trusted Life Agentsஇல் ‘Rookie Insurance Agency Leader of the Year’ விருதை வென்றார் மேலும் Asian Insurance Review Magazineஆல் ஏற்பாடு செய்யப்பட்ட Advisers Awards 2020 விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது. மதிப்புமிக்க MDRT MCC நிர்வாகக் குழுவின் உறுப்பினரான அவர், LMRA IQA/IQMA விருதுகளையும் வென்றுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த Softlogic Life இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. இந்து ஆர்டிகல, “Softlogic Life தனது ஊழியர்களின் தொழில்சார் மேம்பாட்டிற்கான முதலீடுதான் அதன் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் விற்பனைக் குழுவின் நெறிமுறைகள், அணுகுமுறை மற்றும் தரம் ஆகியவை எங்கள் அடையாளத்திற்கு வழிவகுத்தன. MDRTஇன் இலங்கை தலைவராக அதன் உறுப்பினர்களில் ஒருவரான லஹிரு நியமிக்கப்பட்டமை எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் எமது முயற்சிகளுக்கு சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். அவரது அர்ப்பணிப்பு மற்றும் முயற்சி, அத்துடன் சமீபத்திய சவால்களை எதிர்கொள்வதில் அவரது உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம், எங்கள் நிறுவனத்தில் சிறந்து விளங்கும் ஆர்வம் மற்றும் கலாச்சாரம் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. Softlogic Lifeஐ மேலும் முன்னேற்றும் லஹிருவின் இந்த சாதனை, இலங்கையின் காப்புறுதி துறையின் முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.” என தெரிவித்தார்.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கையின் திறன்களை உயர்த்துவதன் மூலம் உலகளாவிய மற்றும் உள்ளூர் காப்புறுதித் துறைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதே லஹிருவின் நம்பிக்கை. இலங்கையின் காப்புறுதித் துறையை உலக அரங்கிற்குக் கொண்டுசெல்லும் வகையில், அதன் விற்பனை நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதையும் லஹிரு நோக்கமாகக் கொண்டுள்ளது. திறன்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றில் லஹிருவின் ஆர்வம் அவரை ஒரு தலைவராக வெளிவரச் செய்தது, இது SoftLogic Life இன் ஊழியர் மேம்பாட்டு உத்தியின் வெற்றிக்கான சான்றாகும்.
தன0து நியமனம் குறித்து கருத்து தெரிவித்த திரு. லஹிரு மதுரங்க, “MDRTஇன் இலங்கையின் இளைய தலைலவராக நான் நியமிக்கப்பட்டதை எனது தொழில் வாழ்க்கையில் கிடைத்த பெரும் கௌரவமாக கருத விரும்புகிறேன். இது எனது தொழில்சார் வாழ்க்கைப பயணத்தில் மிக முக்கியமான தருணம்.” என தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த லஹிரு, “இது எனது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, எனது குழுவின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் Softlogic Life இன் ஆதரவின் விளைவாக இதைக் குறிப்பிட முடியும். வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறையில் இந்த நாட்டில் நிதிச் சேவைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிக்க இது ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். MDRT கமிட்டியில் இணைந்து புத்தாக்கங்களை உருவாக்கவும், சிறப்பை மதிப்பிடவும், மற்ற தொழில் வல்லுநர்களுக்கு சிறந்து விளங்க உதவவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நேரத்தில், பயிற்சி, ஆலோசனை மற்றும் சிறந்த வாய்ப்புகள் மூலம் இன்று என்னை தலைவராக்கிய எனது Softlogic Life Instituteக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
Softlogic Life தொடர்பாக
Softlogic Life Insurance PLC ஆனது Softlogic Capital PLC இன் துணை நிறுவனமாகும், மேலும் இது Softlogic குழுமத்தின் ஒரு அங்கமாகும், இது சுகாதாரம், சில்லறை விற்பனை, ICT, Leisure, Automobile மற்றும் நிதி சேவைகள் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இலங்கையின் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குதாரர்களில் உலகளாவிய முதலீட்டாளர் Leapfrog முதலீடுகள் அடங்கும், இது 2 பில்லியன் அமெரிக்க டொருக்கும் மேலாக நிர்வகிக்கிறது, மேலும் உலகின் பல மதிப்புமிக்க முதலீட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய முதலீட்டாளர் தளமாகும்.