நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன்முதல் செயற்கை நுண்ணறிவு ஆண்டறிக்கை பகுப்பாய்வியை அறிமுகப்படுத்தும் Softlogic Life

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மேலும் ஒரு படி உயர்ந்து தனது ‘ஆண்டறிக்கை பகுப்பாய்வியை’ (Annual Report Analyzer) புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் மேம்படுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட இந்நிறுவனம், குரல் வழி கட்டளைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், தானியங்கி கற்றல் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட “Lifey” எனும் நுண்ணறிவு முகவரை உருவாக்கியுள்ளது. இதனுடன் தரவுகளை தானாகவே புரிந்து விளக்கும் திறனையும் இணைத்துள்ளது.

இத்தகைய உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆண்டறிக்கை ஆய்வில் பயன்படுத்தும் இலங்கையின் முதல் நிறுவனம் என்ற பெருமையை Softlogic Life நிறுவனம் பெற்றுள்ளது. இதன்மூலம் இலங்கையின் வணிக அறிக்கையிடல் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Softlogic Life அறிமுகப்படுத்திய ஆண்டறிக்கை பகுப்பாய்வி, இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியாகும். இது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன்கள் மற்றும் இயந்திர கற்றல் நெறிமுறைகளைப் பயன்படுத்தி, பெருமளவு தரவுகளை விரைவாக செயலாக்கி, அதன் ஆண்டறிக்கைகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்து விளக்குகிறது.

இதன்மூலம், பங்குதாரர்களுக்கு முக்கியமான தகவல்களை மிக விரைவாகவும், எளிமையாகவும், திறம்படவும் பெற முடிகிறது. இந்த புதிய முன்னெடுப்பு, ஆண்டறிக்கைகளை படிப்பதற்கான பழமையான முறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.

புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆண்டறிக்கை பகுப்பாய்வியின் முக்கிய அம்சமாக “Lifey” எனும் செயற்கை நுண்ணறிவு முகவர் விளங்குகிறது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பம் ஒரு நவீன செயற்கை நுண்ணறிவு உதவியாளராக செயல்பட்டு, பயனாளர்களுடன் குரல் மற்றும் எழுத்து வடிவில் நேரடியாக உரையாடி, நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இருந்து தகவல்களை சேகரித்து, ஆய்வு செய்து, வழங்கும் திறன் கொண்டது.

சிக்கலான தரவு பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் இந்த செயற்கை நுண்ணறிவு முகவர், கைமுறை தேடல்களோ அல்லது தொழில்நுட்ப அறிவோ இல்லாமலேயே, பங்குதாரர்கள் முக்கிய நிதி மற்றும் செயல்பாட்டு தகவல்களை எளிதாக ஆராய்ந்து புரிந்துகொள்ள உதவும் வகையில், இயல்பான மற்றும் தொடர்ச்சியான அனுபவத்தை வழங்குகிறது.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த Softlogic Life நிறுவனத்தின் நிதிப் பிரிவின் பிரதானி நுவன் வித்தானகே, ‘ Softlogic Life எப்போதுமே துறையில் பல முதன்முறை முயற்சிகளையும், இலங்கையின் முதல் முயற்சிகளையும் அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இருந்து வருகிறது. இலங்கையின் முதல் காணொளி ஆண்டறிக்கை, ‘உங்கள் சொந்த அறிக்கையை உருவாக்குங்கள்’ என்ற வசதி, ஊடாடும் தரவுப்பலகை ஆகியவை இவற்றில் சில. கைமுறை பகுப்பாய்வின் நேரம் பிடிக்கும் செயல்முறையை நீக்கி, எமது பங்குதாரர்களுக்கு விரிவான தரவுகளை விரைவாகவும் திறமையாகவும் அணுக அதிகாரம் அளிக்கும் வகையில் ஆண்டறிக்கை பகுப்பாய்வியை நாங்கள் உருவாக்கினோம்,’ என அவர் தெரிவித்தார்.

‘இந்தக் கருவி சிக்கலான தகவல்களை தெளிவான, செயல்படுத்தக்கூடிய நுண்ணறிவுகளாக மாற்றி, மிகவும் சிக்கலான விபரங்களையும் கூட எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக மாற்றுகிறது. செயற்கை நுண்ணறிவுடனான எமது பயணத்தை தொடரும் நிலையில், அணுகலை மேலும் எளிமைப்படுத்த புதிய அம்சங்களுடன் இந்தக் கருவியை இப்போது மேம்படுத்தியுள்ளோம். இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் (1.5 மில்லியன்) கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமாக, வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகம் தொடர்பில் எமக்கு கணிசமான பொறுப்பு உள்ளது. எமது தகவல்களை ஒவ்வொரு பங்குதாரருக்கும் சிறந்த, நிலையான முறையில் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவது இந்தப் பொறுப்பின் மீதான எமது அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.’ என அவர் மேலும் கூறினார்.

நிறுவனத் தகவல்களை வழங்குவதில் Softlogic Life கையாளும் புத்தாக்க அணுகுமுறை, ஒரு புதிய தரநிலையை நிர்ணயிக்கிறது. குரல் வழி குரல் வழி கட்டளைகளுக்கு பதிலளிக்கும் செயற்கை நுண்ணறிவு முகவர் மற்றும் மாறுபடும் தரவுக் காட்சிப்படுத்தல்கள் போன்ற அம்சங்களை தங்களது ஆண்டறிக்கை பகுப்பாய்வி கருவியில் ஒருங்கிணைப்பதன் மூலம், அவர்கள் தொடர்ந்து தொழில்நுட்ப சிறப்பை மேம்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், Softlogic Life நிறுவனத்தின் டிஜிட்டல் புத்தாக்கப் பிரிவின் தலைமை அதிகாரி சாரங்க விஜயரத்னே இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘குரல் இயக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பகுப்பாய்வுகள் நமது நடவடிக்கைகளில் வசதி மற்றும் அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. தட்டச்சு செய்ய இயலாத அல்லது நகர்வில் இருக்கும் நபரின் தேவைகளுக்கும் இந்தக் கருவி பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது. இது குரல் கட்டளைகளுக்கு உடனடியாகவும், துல்லியமாகவும் பதிலளிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கு புள்ளிப்பட வடிவமைப்பின் உதவியுடன் சிக்கலான தரவுகளை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வரைபடங்களாக மாற்றி, வரலாற்று அறிக்கை பகுப்பாய்வி பங்குதாரர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்கி, தெளிவு, செயல்திறன் மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிவுறுத்தல்களை மிகவும் எளிதாக வழங்குகிறது.’ என தெரிவித்தார். 

Softlogic Life நிறுவனம் மாறிவரும் டிஜிட்டல் உலகின் தொடர்ந்து உருமாறும் தேவைகளுக்கான தீர்வுகளை உருவாக்குவதில் தெளிவான கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நிறுவனம் மற்ற எந்த நிறுவனத்தையும் போன்று இல்லாமல் தன்னுடைய பாதையில் முன்னேறி, புதிய தரநிலைகளை நிர்ணயிக்கும் வகையில் தொழிலுக்கான மாதிரியாக மாறி வருகிறது. சமீப காலமாக, Softlogic Life நிறுவனம் பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. பிரபல SAFA சிறந்த வெளிப்படுத்தப்பட்ட ஆண்டறிக்கை விருதுகளில் 2023இல் இரண்டு சிறப்பு 3 விருதுகளைப் பெற்ற இலங்கையின் ஒரே நிறுவனமாக மாறி Softlogic Life வரலாறு படைத்துள்ளது. இது நிதி அறிக்கைப் பதிவிற்கும், கூட்டாண்மை வெளிப்படைத்தன்மைக்கும் Softlogic Life இன் சிறப்பை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.

CA Sri Lanka 57ஆவது TAGS Annual Report Awards விருது வழங்கும் விழாவில் Softlogic Life நிறுவனம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஒட்டுமொத்த அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், 2023 CMA Sri Lanka – Integrated Reporting Awards விருது வழங்கும் விழாவில் மொத்த அளவிலான வெற்றியாளராக உயர்ந்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை, நிதி அறிக்கை தயாரிப்பில் கூட நவீன டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கு நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

தொடர்புகளுக்கு: Upeksha.Hettiarachchi@softlogiclife.lk