மரக்கறி தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நத்தார் மரம்
இலங்கையில் முதன் முறையாக மரக்கறி தாவரங்களைப் பயன்படுத்தி கொழும்பின் காலி முகத்திடலை அண்மித்து, நத்தார் மரம் நிறுவப்பட்டிருந்தது. 20 அடிக்கும் மேல் உயரமான இந்த நத்தார் மரம், 2000க்கும் அதிகமான தாவரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. அனைத்து இலங்கையர்களையும் வீட்டுத் தோட்டச் செய்கையை ஊக்குவிக்கவும், சுய தன்னிறைவான வாழ்க்கை முறையை பின்பற்றவும் ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
பருவ காலத்தின் நிறைவில் குறித்த தாவரங்கள் பாடசாலைகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டது.