Live Green Love Green செயற்திட்டம் என்பது சொஃப்ட்லொஜிக் லைஃப் ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டமாகும். சுய தன்னிறைவான வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கு வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், வெளியக திட்டத்துக்கு நீடிக்கப்பட்டதுடன், கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து, பொது நூலகத்தை அண்மித்த பகுதியில் பயிரிடும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.