Softlogic Life ஆசியாவில் தொழில்நுட்ப புத்தாக்கத்தை முன்னெடுத்து Asia Insurance Industry Award நிகழ்வில் ‘InsurTech of the Year’ இறுதிப் போட்டியாளராக தெரிவு

இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, 27வது Asia Insurance Industry விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க ‘InsurTech of the Year’ விருதுக்கான இறுதிப் போட்டியாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, இலங்கையின் காப்புறுதிச் சூழலில் புத்தாக்கத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்வதில் Softlogic Lifeஇன் அசையாத அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. இந்த அங்கீகாரம் Softlogic Lifeஇன் சாதனைகளை மட்டுமல்லாமல், ஆசியா முழுவதும் காப்புறுதித் துறையை வடிவமைப்பதில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் அதிகரித்து வரும் பங்குக்கான அம்சத்தையும் முன்னிலைப்படுத்துகிறது.

இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கான இறுதிப் போட்டியாளர்கள் வெளியிடப்பட்டுள்ளனர், இதில் பிராந்தியத்தில் இருந்து 50 சிறந்த காப்புறுதி நிறுவனங்கள், மறுகாப்புறுதியாளர்கள், தரகர்கள், அவதானம் தொடர்பான முகாமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களின் ஒரு சிறப்பு பட்டியல் இடம்பெற்றனர். கடுமையான தரப்படுத்தல்கள் மற்றும் வெளிப்படையான தேர்வு செயல்முறைக்கு பெயர் பெற்ற Asia Insurance Industry Awards நிகழ்வு, காப்புறுதித் துறையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழுவால் மேற்பார்வையிடப்படுகிறது. தொலைதூர தேர்வின் முதல் சுற்று, 17 பிரிவுகளில் பரந்து விரிந்த 200 க்கும் மேற்பட்ட தேர்வுகளை மிக கவனமாக மதிப்பீடு செய்தது. இந்த மதிப்பீட்டு செயல்முறை மூலம், Softlogic Life ஒரு சிறந்த பரிந்துரையாக உருவெடுத்தது, இது InsurTech நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காட்டுகிறது.

இந்த சமீபத்திய நியமனம் குறித்து Softlogic Lifeஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் இப்திகார் அஹமட் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக, Softlogic Life இன் மாற்றத்தக்க பயணத்தின் பின்னணியில் புத்தாக்கம் உந்து சக்தியாக உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்னோடியில்லாத மதிப்பை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காப்புறுதித் துறையில் சாத்தியமானவற்றின் எல்லைகளை நாங்கள் தொடர்ந்து உந்துவித்து வருகிறோம். எங்கள் குழுவின் அயராத முயற்சிகள் மற்றும் எங்கள் புத்தாக்கமான தீர்வுகளின் ஆழமான தாக்கத்திற்கு ‘IsurTech of the Year’ விருதுக்கான எங்கள் பரிந்துரை அமைந்துள்ளது. புத்தாக்கங்களத் தழுவுவது ஒரு விருப்பமல்ல என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்; வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில் இது இன்றியமையாதது. Softlogic Life காப்புறுதித் துறையில் புதிய எல்லைகளை முன்னோடியாகச் செய்வதற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் மற்றும் சிறந்த தரங்களை அமைப்பதற்கும் உறுதியளிக்கிறது.” என தெரிவித்தார்.

இந்த நியமனமானது, Softlogic Life தனது காப்புறுதிப் பத்திரதாரர்களுக்கு பல தொழில்துறையில் முதல் மற்றும் உலகின் முதல் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதற்கு இதுவொரு சான்றாகும். ஒரு நாளில் தன்னியக்க காப்புறுதி பத்திர உரிமைகோரல் தீர்வு, Instaclaim app, 1 நிமிட மருத்துவமனையில் சேர்க்கும் உரிமைகோரல் தீர்வு (1-minute Hospitalisation Claim settlement), 100% டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விற்பனை தளம், தன்னியக்க ஆயுள் காப்புறுதிப் பத்திர வெளியீடு மற்றும் மொபைல் அடிப்படையிலான மைக்ரோ தயாரிப்புகள் போன்ற அதிநவீன தீர்வுகள் பாதையை வகுத்துள்ளன. நிறுவனம் அதன் போட்டி நிலையை மேம்படுத்தும் போது சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க வேண்டும். மேலும், இந்த கண்டுபிடிப்புகள் Softlogic Life க்கு 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் உயிர்களைப் பாதுகாக்க உதவியதுடன், நாட்டின் காப்புறுதி ஊடுருவலை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கியுள்ளது.

27வது ஆண்டில், Asia Insurance Industry Awards நிகழ்வு காப்புறுதித் துறையினர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே சிறப்பின் மிகவும் விரும்பப்படும் அடையாளமாகவும், சக குழுவின் அங்கீகாரமாகவும் மாறியுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக ஆசியாவின் காப்புறுதித் துறையில் குரல் கொடுத்துள்ள Asia Insurance Review என்ற இதழால் இந்த விருதுகள் 1997 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.