நாட்டில் இது போன்றதொரு திட்டம் முன்னெடுக்கப்படும் முதலாவது சந்தர்ப்பமாக அமைந்திருப்பதுடன், இலங்கையில் பெண்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த, பாதுகாப்பான மற்றும் பெருமளவு ஆதரவான வியாபார சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் பிரத்தியேகமான மற்றும் புரட்சிகரமான பல்வேறு அம்சங்கள் 4Her கட்டமைப்பில் அடங்கியிருந்தது. அதனூடாக, அவர்களுக்கு பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டிலிருந்து சமத்துவத்தை எய்தவும், சிறந்த வகையில் பங்களிப்புகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது.
அபிவிருத்தி, பணி-வாழ்க்கை சமநிலை, தொழில்முயற்சியாண்மை, கல்வி மற்றும் தலைமைத்துவம் போன்ற நான்கு பிரதான அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பெண் ஊழிய அங்கத்தவர்களுக்கு அல்லது தொழில்முயற்சியாளர்களுக்கு பொருத்தமான, வளர்ச்சி அடிப்படையிலான பணிக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்து, தமது தொழில்நிலையில் நிலைத்திருப்பதற்கும், பணியிலும் அல்லது இல்லத்திலும் பல்வேறு நிலைகளை நிர்வகித்துக் கொள்ளவும் உதவும் வகையில் சகல செயற்பாடுகளும் அமைந்திருந்தன.