ஏனைய அனுகூலங்கள்

100 ஆண்டுகள் பிளஸ் ஆயுள் காப்புறுதி

வரையறுக்கப்பட்ட தவணை தொகையுடன் கூடிய முழு ஆயுள் காப்புறுதி அனுகூலம். மரணம் அறிவிக்கப்பட்டவுடன் அனுகூலத் தொகையில் 10% செலுத்தப்படும் (அதிகபட்சம் ரூபா 200,000 வரை)


விபத்து மரண அனுகூலம்

மேலதிகமாக வழங்கப்படும் தொகை, நிறுவனத்தினால் குறிப்பிட்ட ஒரே நபருக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆயுள் காப்புறுதிகளுக்கும் அடிப்படை காப்பீட்டு தொகையின் (4) மடங்கிற்கோ அல்லது ஒரு தனிப்பட்ட நபரின் பெயரில் பெறப்பட்ட அனைத்து ஆயுள் காப்புறுதிகளுக்குமான அதிகபட்ச சந்தை வரம்பு தொகையான 30 மில்லியனுக்கோ (ரூபாய் முப்பது மில்லியன்) மேற்படாது இருக்க வேண்டும்.


மேலதிக ஆயுள் அனுகூலம்

காப்பீட்டின் உறுதி செய்யப்பட்ட தொகையானது அடிப்படை தொகையின் 8 மடங்காக வரையறுக்கப்பட்டுள்ளது


முழு நிரந்தர இயலாமை அனுகூலம்

நிரந்தர இயலாமை நிகழும்போது உறுதிசெய்யப்பட்ட காப்பீட்டின் 60%வழங்கப்படும், மீதி 40%மானது 4 சம தவணைக் கட்டணங்களாக 4 வருட காலப்பகுதியில் வழங்கப்படும்.


நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்

காப்பீட்டாளரின் ஒப்பந்த அனுகூல அட்டவணையில் காணப்படும் நிரந்தர பகுதி இயலாமையின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட தொகையின் ஒரு விகிதம் வழங்கப்படும்.


கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம்

விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் முழு நிரந்தர இயலாமையின் போது, நிறுவனம் அனுகூலத்தின் காலாவதி தேதி வரை “உறுதி செய்யப்பட்ட அடிப்படை தொகை, மேலதிக ஆயுள் அனுகூலம், பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம், மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம், வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம், குடும்ப உடல்நல பராமரிப்பு அனுகூலம மற்றும் வருடாந்திர வளர்ச்சி அனுகூலம்” ஆகியவற்றுக்கு கட்டுப்பண தள்ளுபடி வழங்கும்.


மரணத்தின் போது ‘கட்டுப்பண தள்ளுபடி’ (waiver of premium) அனுகூலம்

ஆயுள் காப்புறுதி செய்யப்பட்டவரின் மரணம் நிகழும்போது, ​​ இறப்பு தேதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் காலத்தின் காலாவதி தேதி வரை ஒழுங்கான அடிப்படை கட்டுப்பணத்தை நிறுவனம் தள்ளுபடி செய்யும்.


வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம்

பிரதான காப்பீட்டாளரின் துணைக்கு ஆயுள் காப்புறுதி வழங்கக்கூடிய தெரிவு உள்ளது


மருத்துவ சிகிச்சை அனுகூலம்

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், வருமான இழப்பு, மருத்துவ பட்டியல்கள் (பில்கள்), போக்குவரத்து செலவுகள் போன்றவற்றை ஈடுகட்டுவதற்கான தினசரி அனுகூலம்.


மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்

பிரதான காப்பீட்டாளர் இறந்தால் மொத்த தொகை அனுகூலம் துணைக்கு செலுத்தப்படும்.


குடும்ப உடல்நல பராமரிப்பு அனுகூலம்

பிரதான காப்பீட்டாளருக்கு மரணம் அல்லது முழு நிரந்தர இயலாமை ஏற்பட்டால் செலுத்தப்படும் மாதாந்திர அனுகூலம்.


பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம்

காப்புறுதி ஆவணத்தில் கொடுக்கப்பட்ட 36 பாரிய நோய்களின் பட்டியலில் உள்ள ஒரு நோய் இருக்கிறது என்று முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது சத்திரசிகிச்சைக்குட்பட்டார் என்று நிரூபிக்கப்பட்டாலோ அதற்கான அனுகூலத் தொகை வழங்கப்படும். காப்பீட்டாளருக்கு அதே காப்புறுதியின் கீழ் வாழ்க்கைத் துணைக்கும் அதே அனுகூலத்தை இணைக்கும் தெரிவு உண்டு.


வருடாந்திர வளர்ச்சி அனுகூலம்

இந்த அனுகூலம் பெறப்பட்டால், ஆயுள் காப்பீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 5% அல்லது 10% விகிதத்துக்கு ஏற்ப ஆண்டுதோறும் அடிப்படை தொகை தானாக அதிகரிக்கும்.


இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும

எங்களுக்கு ஒரு அழைப்பு கொடுங்கள்

1312