பாதுகாக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் என்பது ஒரு தனித்துவமான தயாரிப்பு ஆகும், இது முதிர்வடையும் நிலையில் திரட்டப்பட்ட நிதியுடன் சேர்ந்து ஆயுள் பாதுகாப்பையும் அளிக்கிறது. கூடுதலாக, அதோடு இந்த தயாரிப்பு கவரக்கூடிய ஒரு பங்கிலாப வீதத்தையும் உங்களுடைய கணக்கிற்கு ஒவ்வொரு மாதமும் வைப்பு செய்யும்.
காப்புறுதியின் முதல் 90 நாட்களுக்குப் பிறகு, காப்புறுதி உரிமையாளர் காப்புறுதியிலிருந்து (பகுதி ஒப்படைப்பு) நாட்டின் எப்பகுத்தியிலும் உள்ள சம்பத் வங்கி ATM ஐ பயன்படுத்தி பணத்தை மீளப்பெறலாம்.
ஆயுள் காப்புறுதி பின்வருவனவற்றை வழங்கும்;
இயற்கை மரணம் – திரட்டப்பட்ட நிதியின் பெறுமதி அல்லது காப்புறுதி செய்யப்பட்ட தொகை இவ்விரண்டிலும் குறைந்த தொகையின் இருமடங்கு வழங்கப்படும்.
விபத்து மரணம் – திரட்டப்பட்ட நிதியின் பெறுமதி அல்லது விபத்து மரணத்தின் அதிகபட்ச அனுகூலத் தொகை இவ்விரண்டிலும் குறைந்த தொகையின் இருமடங்குடன், இயற்கை இறப்பு அனுகூலத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.