சொஃப்ட்லொஜிக் லைஃப் யூனிவேர்சல் (சர்வதேச) திட்டம்

சொஃப்ட்லொஜிக் லைஃப் யூனிவேர்சல் (சர்வதேச) திட்டம் ஒரு முழுமையான சர்வதேச ஆயுள் தயாரிப்பு ஆகும், இது வாடிக்கையாளரின் அனைத்து தேவைகளையும் தேவைப்படும் போதெல்லாம் இணைக்க / மாற்ற தெரிவுகளுடைய திட்டம்.

யூனிவேர்சல் லைஃப் தயாரிப்பின் வளைந்துக்கொடுக்கும் சிறப்பம்சங்கள்

  • 80 வயது வரை நீட்டிக்கப்பட்ட ஆயுள்   காப்புறுதி.
  • வாடிக்கையாளர் தேவைகளின் அடிப்படையில் பத்திரத்தை வடிவமைக்கக்கூடிய காப்புறுதி.
  • காப்பீட்டாளர் மரணம் அடைந்தாலும் “மரணத்தின்போது கட்டுப்பண தள்ளுபடி” என்பதின் அடிப்படையில் வாழ்க்கை துணை மற்றும் உடல்நல காப்பீடுகளை அவற்றின் தவணை முடியும் வரை, வாழ்க்கை துணைக்கு தொடரலாம்.
  •  டாப்-அப் (top up) தவணைத் தொகை 03 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படும் (வருடத்திற்கு அதிகபட்சம் 2 தடவை. ஆகக்குறைந்த டாப் அப் (top up) கட்டணம் ருபாய.  25,000).
  • தவணைத்தொகை செலுத்தும் காலமானது காப்புறுதி தவணைக்கு குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம்.
  • பாதுகாப்பு, ஓய்வு, சேமிப்பு போன்ற வித்தியாசமான 3 காப்புறுதி தேவைகளை பூர்த்தி செய்யும்.
  • காப்பீட்டாளர் மரணமடைந்தாலும் பாலிஸியின் உறுதியளிக்கப்பட்ட முதிர்வு தொகையை காப்புறுதியின் தவணை முடிவில் பரிந்துரைக்கப்பட்டவர் பெற்றுக்கொள்வார்.
  • WOP (TPD) விபத்து மற்றும் நோயினால் ஏற்படும் முழு நிரந்தர இயலாமைக்கு கட்டுப்பண தள்ளுபடி அனுகூலம், அடிப்படை காப்புறுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டாளருக்கு முழு நிரந்தர இயலாமை ஏற்படும்போது அடிப்படை கட்டுப்பணத்தை கட்டும் பொறுப்பை நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். காப்பீட்டாளரின் காப்பீடு முதிர்வடையும்போது முதிர்வு தொகையும் வழங்கப்படும்.


தகுதி அடைவதற்கான விதிகள்

  • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (சரியான வயது).
  • அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்).
  • காப்புறுதி முடிவுறும் வயது 70 (அண்மிய பிறந்த நாள்).

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்,

  • விபத்து மரண அனுகூலம்.
  • மேலதிக ஆயுள் அனுகூலம்.
  • முழு நிரந்தர இயலாமை அனுகூலம்.
  • நிரந்தர பகுதி இயலாமை அனுகூலம்.
  • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு அனுகூலம்(36 நோய்களை உள்ளடக்கியது).
  • வாழ்க்கை துணையின் ஆயுளுக்கு பாரிய நோய் / உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு  அனுகூலம் (36 நோய்களை உள்ளடக்கியது).
  • வாழ்க்கை துணை காப்பீடு அனுகூலம்.
  • மரணச்சடங்கு செலவுகளை ஈடு செய்யும் அனுகூலம்.
  • கட்டுப்பண பாதுகாப்பு அனுகூலம் (கட்டுப்பண தள்ளுபடி).
  • மருத்துவ சிகிச்சை அனுகூலம்.
  • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம்.
  • குடும்ப உடல்நல பராமரிப்பு சிறப்பு அனுகூலம் + வெளிநாட்டு சிகிச்சை.
  • அதி உயர் சுகாதார அனுகூலம்.
  • முழு நிரந்தர இயலாமையின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்.
  • மரணத்தின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்.
  •  WOP (மரணம்)   மரணத்தின் போது ‘கட்டுப்பண தள்ளுபடி’ (waiver of premium) சலுகை அளிக்கப்படும்
  • பணவீக்கக் காப்பு [inflation guard]

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும