சொஃப்ட்லொஜிக் லைஃப் சைல்ட் (சிறுவர்) திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலபகுதியில் ஒரு ஆயுள் காப்பீட்டு வழங்கப்பட்டு பயனாளியாக குழந்தை பெயரிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்தும் காலம் முடிவுறும்போது காப்பீட்டாளர் உறுதிப்படுத்தப்பட்ட தொகையும் திரட்டப்பட்ட போனஸும் பெறத் தொடங்குவார். (ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட்ட அடிப்படையில் அறிவிக்கப்படும்). 10 வருடங்களுக்கு அதிகமாக நடைமுறையில் இருக்கும் காப்புறுதிகளுக்கு மேலதிக விசுவாச (loyalty) போனஸ் வழங்கப்படும்.
இந்த காப்புறுதியின் கீழ் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு மற்றும் வருடாந்திர ஒழுங்கான கால தவணைக் கட்டணங்கள் உள்ளன.
காப்புறுதி காலப்பகுதியின் இறுதியில், காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 200% ஐ, ஆண்டுக்கு 40% ஆக தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆரம்பிக்கும்.
காப்பீட்டாளர், சிறுவர் அனுகூலம் பெற்றுக்கொள்ளும் காலப்பகுதியில் இறந்தால், மீதமுள்ள காலத்திற்கு பிள்ளை அனுகூலத்தின் 2 மடங்கை பெறுவார்.