ஸ்டார் பொயின்ட்ஸ் காப்புறுதித் திட்டம்

இலங்கையின் முன்னோடியான லோயல்டி திட்டங்களில் ஒன்றான – ஸ்டார் பொயின்ட்ஸ் உடன் கைகோர்த்து, சொஃப்ட்லொஜிக் லைஃப் தற்போது, ஸ்டார் பொயின்ட்ஸ் வைத்திருப்பவர்களுக்கு பெறுமதி சேர்க்கப்பட்ட அனுகூலமாக, ஆயுள் காப்புறுதியுடன், தினசரி வைத்தியசாலை அனுமதி பண அனுகூலத்தை வழங்குகின்றது. ஸ்டார் பொயின்ட்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் திரட்டியுள்ள ஸ்டார் பொயின்ட்ஸ்களின் அடிப்படையில் 2 வேறான திட்டங்களின் அடிப்படையில் இந்த உள்ளம்சம் வழங்கப்படுகின்றது.

அனுகூலங்களின் சாராம்சம்

பிளான் 1 (Rs) பிளான் 2 (Rs)
அடிப்படை ஆயுள் காப்பீடு 100,000 175,000
ஆயுள் காப்பீட்டுக்கு மாத்திரம் வருடாந்த கட்டுப்பணம் 300 500
பிளான் 1 (Rs) பிளான் 2 (Rs)
அடிப்படைய ஆயுள் காப்பீடு 100,000 175,000
வைத்தியசாலை அனுமதி பண அனுகூலம் (தினசரி) 500 500
ஆயுள் காப்பீடு மற்றும் வைத்தியசாலை அனுகூலத்துக்கான வருடாந்த கட்டுப்பணம் 720 995

 

வயது எல்லை

  • ஆயுள் காப்புறுதிதாரரின் ஆகக் குறைந்த பிரவேச வயது – 19 வருடங்கள் (அடுத்த பிறந்த தினம்)
  • ஆயுள் காப்புறுதிதாரரின் ஆகக்கூடிய பிரவேச வயது (ஆயுள் காப்பீடு) – 65 வருடங்கள் (அடுத்த பிறந்த தினம்)
  • காப்புறுதி முடிவுக்கு வரும் வயது (ஆயுள் காப்பீடு) – 65 வருடங்கள் (சரியாக)

பொது நிபந்தனைகள்

  • விபத்து அல்லது சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட நேர்ந்தால், வைத்தியசாலையில் தங்கியிருக்கும் காலப்பகுதி 2 நாட்கள் அல்லது அதற்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் ஆகக்கூடியது 30 நாட்களுக்கு வைத்தியசாலை அனுமதி பண அனுகூலம் செலுத்தப்படும்.
  • உரிமைகோரல் அறிவிக்கப்பட வேண்டிய காலம் – சம்பவம் நடைபெற்ற தினத்திலிருந்து 90 நாட்களுக்குள்.
  • காப்பீட்டின் புவியியல் ரீதியான எல்லைகள் – உலகளாவிய ரீதியில்
  • ஏற்கனவே காணப்பட்ட புற்றுநோய், இருதய கோளாறு, சிறுநீரக கோளாறு அல்லது பக்கவாதம் போன்ற காரணிகளால் உயிரிழப்பு நேர்ந்தால், காப்பீடு வழங்கப்படாது.

காப்புறுதி ஆவணத்தை பார்வையிட


விசாரணைகளுக்கு

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும