சொஃப்ட்லொஜிக் லைஃப் லெகசி திட்டம்

சொப்ட்லொஜிக் லைஃப் லெகசி திட்டம் என்பது காப்பீட்டாளரின் முழு ஆயுட்காலத்தையும் உள்ளடக்கும் ஒரு தயாரிப்பு ஆகும். இது பல ஆர்வமூட்டும் அம்சங்களைக் கொண்டுள்ளது, இது உங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களுக்கு தேவையான பலதரப்பட்ட பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப ஒரு நபரின் கிட்டத்தட்ட அனைத்து ஆயுள் காப்பீட்டுத் தேவைகளையும் (பாதுகாப்பு) பூர்த்தி செய்கிறது. மேற்கூறியவற்றிற்கு கூடுதலாக, நிறுவனத்தின் முதலீடுகளின் சரியான வருமானத்தின் அடிப்படையில் உங்கள் முதலீடுகளுக்கு (சேமிப்பு) அதிகபட்ச வருமானத்தை நாங்கள் வழங்குகிறோம்.

சொஃப்ட்லொஜிக் லைஃப் லெகசி திட்டத்திலுள்ள சிறப்பம்சங்கள்

 • காப்புறுதி காலம் 100 வருடத்திலிருந்து நுழைவு வயதை கழித்து வரும் வருடங்களுக்கு சமமாகும்.
 • கட்டுப்பண வகைகள்; ஒழுங்கான கட்டுப்பணமும்  ஒரே தடவை கட்டுப்பணமும்.
 • ஒழுங்காக கட்டுப்பணத்தைச் செலுத்த 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.
 • பணவீக்கக் காப்பு (inflation guard) 5%, 7.5% அல்லது 10%.

பகுதி மீளப்பெறுதல் விவரங்கள் பின்வருமாறு;

 • ஒழுங்கான கட்டுப்பண காப்புறுதிகளுக்கு ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் 25% நிதியை திரும்பப் பெறலாம், இதற்கு காப்புறுதி முதல் 3 ஆண்டுகளில் நடைமுறையில் இருப்பது மற்றும் காப்புறுதி கட்டணம் செலுத்தும் காலத்திற்குள் இருப்பது என்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
 • கட்டண காலத்திற்குப் பிறகு, 25% நிதியை அதிகபட்சம் இரண்டு முறை திரும்பப் பெறலாம், மேலும் திரும்பப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும்.
 • ஒரே தடவை கட்டுப்பண காப்புறுதிகளுக்கு, 25% நிதியை அதிகபட்சம் இரண்டு முறை திரும்பப் பெறலாம், இதற்கு,  காப்புறுதி முதல் 3 ஆண்டுகளில் நடைமுறையில் இருப்பது  மற்றும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்

தகுதி அடைவதற்கான விதிகள்

 • குறைந்தபட்ச நுழைவு 18 வயது (அண்மிய பிறந்த நாள்).
 • அதிகபட்ச நுழைவு 70 வயது (அண்மிய பிறந்த நாள்).
 • காப்புறுதி முடிவுறும் வயது 100 (காப்பீட்டாளரின் சரியான வயது) – அடிப்படை / மூல காப்பீடு தொகை மட்டும்.

பின்வரும் மேலதிக காப்பீடு (riders) தெரிவுகளை இந்த தயாரிப்புடன் இணைத்து வழங்க முடியும்.

 • மேலதிக ஆயுள் அனுகூலம்.
 • விபத்து மரண அனுகூலம்.
 • வாழ்க்கை துணை காப்பீடு.
 • மருத்துவ சிகிச்சை அனுகூலம்.
 • வெளிநாட்டு உடல்நல பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் காப்பீடு.
 • அதி உயர் சுகாதார காப்பீடு அனுகூலம்.
 • மரணத்தின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம்.
 • மரணத்தின் போது அல்லது முழு நிரந்தர இயலாமையின் போது குடும்ப வருமான பாதுகாப்பை உறுதி செய்யும் அனுகூலம் (விபத்து மற்றும் நோய்).
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து சுகவீன சிறப்பு காப்பீடு.
 • பாரிய நோய்/ உயிர் ஆபத்து தவணை கால அனுகூலம்.
 • விபத்து அல்லது நோய் காரணமாக நிரந்தர இயலாமை ஏற்பட்டால் அனைத்து மேலதிக காப்பீடுகளுக்கான (riders) ‘கட்டுப்பண தள்ளுபடி’ (waiver of premium) ஒரு சலுகையாக அளிக்கப்படும்.

இப்போதே விசாரிக்கவும்

பட்டம்*
பெயர்*
தொலைபேசி எண்*
மின்னஞ்சல் (ஈமெயில்)*

*அனைத்து பைல்ஸும் கோப்புகளும் தேவைப்படும